×

டவுன் கல்லணை பள்ளி அருகே வெள்ளநீர் வடிகால் தூர்வாரும் பணி

நெல்லை : நெல்லை கால்வாய் தூர்வாரும் பணியை கடந்த 28ம் தேதி கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நெல்லை கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று காலை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள மதர்கான் வெள்ளநீர் வடிகால் தூர்வாரும் பணி, நீர்வளத்துறை மூலம் நடைபெற்றது.    இதில் நெல்லை கால்வாய் பாலம் முதல் அருணகிரி தியேட்டர் வரை உள்ள மதர்கான் வெள்ளநீர் வடிகாலில் அடைத்திருந்த மண் குவியல், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் அகற்றப்பட்டன.  இப்பணி நீர்வளத்துறை தாமிரபரணி கோட்ட  செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், இளநிலை  பொறியாளர் மாரியப்பன், 27வது வார்டு கவுன்சிலர் உலகநாதன் ஆகியோர்  மேற்பார்வையில் நடந்தது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை தூர்வாரும் பணியை தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.   தூர்வாரப்பட்ட கழிவுகள் டிராக்டர், டிப்பர் லாரி மூலம் எடுத்துச் சென்று அகற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  …

The post டவுன் கல்லணை பள்ளி அருகே வெள்ளநீர் வடிகால் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Town Cemetery School ,Vishnu ,Down Cemetery School ,Dinakaran ,
× RELATED கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்